குறும்செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..!

2549 deaths due to Coronavirus in India

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆக மொத்தம், இந்தியாவில் 78003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 25922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 975 பேர் பலியாகி உள்ளனர்.

அத்துடன், குஜராத்தில் இதுவரை 9267 பேருக்கும், தமிழகத்தில் 9227 பேருக்கும், டெல்லியில் 7998 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4173 பேருக்கும், ராஜஸ்தானில் 4328 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3729 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

< Most Related News >

Tags :-2549 deaths due to Coronavirus in India

Related posts

ரஷ்ய மருத்துவமனையில் தீ விபத்து : 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி..!

Tharshi

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த கதி..!

Tharshi

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் திடீர் மாயம் : சிக்கியது வீடியோ ஆதாரம்..!

Tharshi

7 comments

Leave a Comment