குறும்செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..!

SriLankan Airlines to extend passenger service

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை, அந்த காலத்தை மேலும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்..,

உலகளாவிய விமான நிறுவனங்கள், நாடுகளுக்கிடையிலான விமான பயணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்காக போக்குவரத்து செய்ய, சரக்கு விமான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய இக்கட்டான காலகட்டத்திலும் கூட அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இலங்கை விமான நிறுவனம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன், தேவையேற்படின் பயணிகளுக்கான சிறப்பு விமான சேவைகளை முன்னெடுக்கவும் தயார் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

< Most Related News >

Tags :-SriLankan Airlines to extend passenger service

Related posts

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Tharshi

2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடுவார் : தலைமை செயல் அதிகாரி தகவல்..!

Tharshi

12.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

8 comments

Leave a Comment