குறும்செய்திகள்

விஜய்க்கு சவால் விடுத்துள்ள மகேஷ் பாபு..!

Mahesh Babu challenged to Vijay

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய்க்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது, தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இன்று ( 9) தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மேலும், சமூக வலைதளத்தில் #HappyBirthdayMaheshbabu என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் “கொரோனா வைரஸ் பிரச்சனை தீவிரமாக இருக்கும் இச்சூழலில் தன் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் யாரும் கூட்டம் கூட வேண்டாம்” என மகேஷ்பு பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது பிறந்தநாள இன்று மரக்கன்று ஒன்றை நட்டு #GreenIndiaChallenge-ல் பங்கேற்றுள்ளார் நடிகர் மகேஷ்பாபு. #GreenIndiaChallenge என்பது, ஒருவர் மரக்கன்றை நட்டு அதன் வெளியிட்டு, மேலும் 3 பேரை அதனை செய்ய சவால் விடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த challegeஐ தற்போது நடிகர் விஜய்க்கும் விடுத்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்த முயற்சி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி இது ஒரு அடி.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

< Most Related News >

Tags :-Mahesh Babu challenged to Vijay

Related posts

18-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 82 பேர் பலி..!

Tharshi

கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு : உலக சுகாதார அமைப்பு..!

Tharshi

9 comments

Leave a Comment