குறும்செய்திகள்

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Today Raasi Palan

மேஷம்: முன்னேற்றம் உண்டாகும் நாள். பணவரவு திருப்தி தரும். மேலதிகாரி ஆதரவுடன் நடந்து கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களின் பிரச்னைகள் அகலும்.

ரிஷபம் : நண்பர்களால் ஆதாயம் பெறும் நாள். வீட்டில் நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். நிம்மதி கூடும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மிதுனம் : தம்பதி இடையே இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். கலைத்துறையினர் தேவையான பொருள்களை வாங்குவர். நண்பர்களுடன் இணைந்து பொதுச்சேவை செய்வீர்கள்.

கடகம்: நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

சிம்மம் : வேலையில் இழுபறிறி உண்டாகும் நாள். வியாபாரத்தில் கவனம் தேவை. பிறரை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்துப் போகவேண்டும். நண்பர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

கன்னி: என்றைக்கோ செய்த தவறுகள் வெளிவரும் நாள். போட்டிகளில் ஈடுபட வேண்டாம். வாக்குக் கொடுத்த விஷயங்களில் சிக்கல் ஏற்படக்கூடும். பொறுப்புகள் ஏற்பதால் வீண் விவாதங்களில் ஈடுபடுவீர்கள். தியானம் பயில்வீர்கள்.

துலாம்: கணவரின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தரும் நாள். தாய்வழி உறவினர்களிடம் பகை வேண்டாம். வழக்குகளில் நிதானப் போக்கு காணப்படும். சுபநிகழ்ச்சிக்கான பணஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விருச்சிகம்: பெண்களின் தைரியம் கூடும் நாள். பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அக்கம் பக்கத்தினருக்கு உதவி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேற்று மொழியாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: திட்டமிடாத விஷயங்களில் மனம் செலுத்தும் நாள். இதுவரை இருந்த சோர்வு நீங்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். சிறு முயற்சிகள் கைகூடும். உறவினருடன் கசப்பு ஏற்படாமல் கவனமாக இருங்கள்.

மகரம் : புதிய விஷயம் கற்கும் நாள். முயற்சியில் பொறுமை தேவை. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் கிடைப்பர். உறவினருடன் எதிர்பார்த்த அளவு நெருக்கம் இருக்காது. காதல் விவகாரங்களில் மகிழ்ச்சி உண்டு.

கும்பம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செய்வீர்கள். வீண் அலைச்சல் இருக்காது. பெண்களின் மதிப்பு உயரும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மீனம்: அரசால் ஆதாயம் பெறும் நாள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். முக்கிய பிரமுகரின் உதவி கிடைக்கும். பெண்களின் விருப்பத்திற்கேற்ப எதுவும் நடக்கும். சக பணியாளர்கள் மதிப்பார்கள்.

< Most Related News >

Tags :-Today Raasi Palan

Related posts

ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி..!

Tharshi

ரணிலுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : சுமந்திரன் அதிருப்தி..!

Tharshi

சிறுநீரக நோய்களை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை சூப்..!

Tharshi

Leave a Comment