குறும்செய்திகள்

சர்ச்சை இயக்குனரின் முதல் லெஸ்பியன் கிரைம் : மிரட்டும் போஸ்டர்..! (படங்கள் இணைப்பு)

Ram gopal varma Announces Lesbian crime thriller Movie

பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனர் என்பார்கள். ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர். லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். கடுமையான விமர்சனங்களையும் வைத்தனர்.

ஆனால், எதையும் கண்டு கொள்ளாத ராம் கோபால் வர்மா, சத்தமில்லாமல் அடுத்த படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அப் படத்தின் ஹீரோயின் படு பயங்கர கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் பலான காட்சிகள் பல இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில். தனது படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்தார் ராம் கோபால் வர்மா. ஒடிசாவை சேர்ந்த ராக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞரும் ஹீரோயினும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையும் ரசிகர்கள் கண்டபடி விளாசினர். ஒரு காலத்தில் சிறந்த படங்களை இயக்கி வந்த அவர், இப்போது இயக்கும் படங்கள் ஆபாசமாகவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

அந்தவகையில் அவர் அடுத்து டேஞ்சரஸ் (Dangerous) என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது லெஸ்பியன் பற்றிய கதை. கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, முதல் முறையாக அவர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறதாம்.

இப்படத்தில் அப்சரா ராணி, நைனா கங்குலி இருவரும் லெஸ்பியனாக நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. அந்த போஸ்டரில் அப்சராவும் ரூபாவும் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனர்.

மேலும் ராம் கோபால் வர்மா, ” இப்படமானது முதல் இந்திய லெஸ்பியன் கிரைம் ஆக்‌ஷன் திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். டைட்டிலுக்கு கீழே, அவர்கள் காதல், ரௌடிகள் பொலிஸ் உட்பட பலரை கொன்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

போஸ்டரை வெளியிட்டு ட்வீட் செய்துள்ள ராம் கோபால் வர்மா, “இரண்டு பெண்களுக்கு இடையிலான காதல் கதையை மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலைப் போலவே சித்தரிக்க வேண்டும் என்பது என் நோக்கம். தற்செயலாக அதன் போஸ்டர் திறமையானவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

வழக்கம் போலவே இந்த போஸ்டருக்கும் பலர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சிலர், இதுபோன்ற படங்களை எடுத்து நமது கலாச்சாரத்தையும் குழந்தைகளையும் அழித்துவிடாதீர்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

மேலும் சிலர், “ஆண் பெண் காதலை விட, பெண்களின் காதல் சக்தி வாய்ந்தது என்று நம்புகின்றோம். அதை கண்ணியமாக சித்தரிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

< Most Related News >

Tags :-Ram gopal varma Announces Lesbian crime thriller Movie

Related posts

கோடை காலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழி முறைகள்..!

Tharshi

பணியாளர்கள் பணிநீக்கம் : ஃபேஸ்புக்கின் அதிரடி அறிவிப்பு..!

Tharshi

ஆணியே புடுங்க வேணாம் போடி.. : கணவன் – மனைவி ஜோக்ஸ்..!

Tharshi

19 comments

Leave a Comment