குறும்செய்திகள்

காதல் தோல்வி : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

Maskeliya young man commits suicide by falling in love

மஸ்கெலியா – பெரிய மஸ்கெலியா தோட்டத்தில் காதல் தோல்வியால் மனவிரக்தி அடைந்த 24 வயதுடைய இளைஞன் நேற்று காலை 10.00 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையில் உதவி அதிகாரி தலைமையிலான பொலிசார், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சென்று, இல்லத்தில் தூக்கிட்டு கொண்டதை பார்வையிட்டனர்.

அத்துடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

< Most Related News >

Tags :-Maskeliya young man commits suicide by falling in love

Related posts

சூப்பரான முட்டை காளான் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாமா..?

Tharshi

மாதவிடாய் பிரச்சினைகளும்.. நாப்கின்களும்..!

Tharshi

03-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment