குறும்செய்திகள்

13.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

13th August Today Raasi Palankal

மேஷம்: கற்பனைக் கவலை நிறைந்த நாள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியாளர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

ரிஷபம் : பாராட்டுக் கிடைக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கியப் பொருள் கிடைக்கும். உறவினர் உரையாடலால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

மிதுனம் : மகிழ்ச்சியால் மனம் துள்ளும் நாள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். பணியாளர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தினரின் மனநிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

கடகம்: நல்லதே நடக்கும் நாள். உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் நெருங்கி வருவார்கள். வியாபார ரீதியாகப் பெரிய தொடர்பு கிடைக்கும். பணியாளர்களின் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம் : உற்சாகமான நாள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உயர் அதிகாரிகள் பணியாளர்களுக்குப் பயன்மிக்க அறிவுரைத் தருவார்கள்.

கன்னி: எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றியடையும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். நேற்றைக்கு இருந்த கவைலைகள் காணாமல் போகும். பணியாளர்கள் பாராட்டப்படுவர்.

துலாம்: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஏமாற வேண்டாம். பொல்லாதவர்களால் தொல்லைகள் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருங்கள்.

விருச்சிகம்: ஜாமீன் கையெழுத்தைத் தவிர்க்க வேண்டிய நாள். விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வம்புகள் வேண்டாம்.

தனுசு: தாமதப்படுத்தப்பட்டு வந்த விஷயங்களை முடிக்கும் நாள். பெருமைகள் வந்து சேரும். பிரச்னைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றுவது பற்றி முடிவு செய்வீர்கள். நண்பர் ஒருவர் அலுவலகத்தில் உறுதுணை புரிவார்.

மகரம் : பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தீய நண்பர்களை விட்டு விலகுவீர்கள். மனதில் நிம்மதி கூடும். உற்சாகத்தோடு பணிபுரிந்து மேலதிகாரியின் பாராட்டு பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் அதிக அக்கறை வரும்.

கும்பம்: அமைதியான நாள். செய்யும் தொழிலில் முனைப்பு அதிகரிக்கும். சிலர் உங்களை விட்டு விலகுவது நன்மைக்கே. ஊக்கத்தோடு பணிபுரிந்து பதவி உயர்வு பெறுவீர்கள். மகன், மகள் பற்றிய கவலைகள் நீங்கும். பணவரவு உண்டு.

மீனம்: முயற்சிகள் கைகூடும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய பணியில் நல்லதொரு தகவல் வந்து சேரும். பழைய முதலீடுகள் திடீர் லாபம் தரும்.

< Most Related News >

Tags :-13th August Today Raasi Palankal

Related posts

யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 213 பேர் உயிரிழப்பு : மேலதிக விபரங்கள் உள்ளே..!

Tharshi

உலகம் முழுவதும் 23.13 கோடியாக உயர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!

Tharshi

“800” திரைப்படத்தின் பெஸ்ட் லுக் ரிலீஸ்..!

Tharshi

Leave a Comment