பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் (Online Registration System) முறையினை பயன்படுத்தி இதுவரை புதிய பாராளுமன்றத்தின் 69 உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும், இத் தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்களை திரட்டுவதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், உறுப்பினர்களின் வசதி கருதி இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் https://registration.parliament.lk எனும் இணைய பக்கத்திற்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த 11 ஆம் திகதி அலரிமாளிகையில் உத்தியோக பூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் இந்த ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது தகவல்களைப் பூரணப்படுத்தி பாராளுமன்ற செயலகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
< Most Related News >
- கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..!
- விஜய்க்கு சவால் விடுத்துள்ள மகேஷ் பாபு..!
- பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று..!
- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதி : 600 பேர் தனிமைப்படுத்தலில்..!
- சர்ச்சை இயக்குனரின் முதல் லெஸ்பியன் கிரைம் : மிரட்டும் போஸ்டர்..! (படங்கள் இணைப்பு)
- திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
- ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு..!
- 13.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!
Tags :-69 MPs have so far registered their database online
11 comments