குறும்செய்திகள்

பெய்ரூட்டில் வெடித்தது அம்மோனியம் நைட்ரேட் வெடிகுண்டு : வெடிபொருள் நிபுணர்கள் கருத்து..!

Ammonium nitrate bomb exploded in Beirut

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்ரூட்டில் பயங்கரமாக வெடித்து சிதறியது, அம்மோனியம் நைட்ரேட்டுடன் கலந்த வெடிகுண்டாகவும் இருக்கலாம் என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நகருக்கு நடுவில் இருந்த கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 160 பேர் உயிரிழந்தனர். 6,000 பேர் காயம் அடைந்தனர். 3,00,000 பேர் லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இங்கு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில்..,

“வெடி விபத்து நடந்தபோது, மஞ்சள் நிறத்தில் புகை பரவி இருந்தது. முதலில் கரும்புகையுடன், பின்னர் சிவப்பு நிறத்தில், இறுதியாக சிவப்பு கலந்த ஆரஞ்ச் நிறத்தில் புகை வெளியாகி இருக்கிறது. இதற்குக் காரணம், கண்டிப்பாக வெடியில் லித்தியம் கலந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்தக் கலரில் புகை வெளியேறும். அம்மோனியம் நைட்ரேட்டுடன் போர் தளபாடங்களும் இருந்து இருக்க வேண்டும்.

அதைப்போன்று ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடிகுண்டு வீசியபோது, பயங்கரமான சத்தத்துடன் புகை ஏற்பட்டது. அதைவிட ஐந்து மடங்கு இந்த வெடிவிபத்து காணப்பட்டது.

முதலில் அம்மோனியம் நைட்ரேட்டில் தீப்பிடித்து பின்னர் அந்த தீ, அருகில் வைக்கப்பட்டு இருந்த ஏவுகணைகள், ராக்கெட்டுகளுக்கு பிடித்து இருக்கலாம். பெய்ரூட்டில் மட்டுமில்லை, மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் இந்த தீப்பிழம்பு தெரிந்தது” என்று தெரிவித்திருக்கின்றனர்.

< Most Related News >

Tags :-Ammonium nitrate bomb exploded in Beirut

Related posts

19.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Madhu

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Madhu

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதி : 600 பேர் தனிமைப்படுத்தலில்..!

Madhu

Leave a Comment