குறும்செய்திகள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.
பரணி: வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
கார்த்திகை 1: கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வந்து போகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: காலையும், மாலையும் கலவையான பலன்கள் இருக்கும்.
ரோகிணி: தடைப்பட்டு வந்த பணிகளை மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள்
மிருகசீரிடம் 1,2: கடனில் பெரும்பகுதியை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம், 3,4: பணியில் மனக்குறைகள் இருந்தாலும் சலுகைகள் உண்டு.
திருவாதிரை: புதிதாக அறிமுகமாவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
புனர்பூசம்: 1,2,3: வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

கடகம்:

புனர்பூசம்,4: திட்டங்கள் எல்லாம் சரியான முறையில் கூடி வரும்
பூசம்: திருமண விஷயமாக உறவினர்களிடமிருந்து சுபச்செய்தி வரும்
ஆயில்யம்: கணவன், மனைவி இடையே முன்பைவிட நெருக்கம் கூடும்.

சிம்மம் :

மகம்: பணியாளர்களுக்குப் பல காலம் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பூரம்: வீடுமாற இடம் பார்த்தவர்களுக்கு வசதியான வீடு அமையும்.
உத்திரம்,1: மகள், மருமகனால் ஏற்படும் சுபச்செலவுகள் மகிழ்ச்சி தரும்.

கன்னி:

உத்திரம்,2,3,4: பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம்.
அஸ்தம்: அரசாங்க விஷயங்கள் அலைச்சலுக்கு பிறகு நன்மைகள் உண்டு.
சித்திரை, 1,2: வண்டி வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். கவலைகள் தீரும்.

துலாம்:

சித்திரை, 3,4: வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய மனிதர்கள் உதவுவர்.
சுவாதி: உறவுகளிடையே சில நாளாக இருந்த மனக் கசப்புகள் மறையும்.
விசாகம் 1,2,3: குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நற்செய்தி உண்டு.

விருச்சிகம்:

விசாகம்,4: பணப்புழக்கம் இருக்கும். அடமான நகைகளை மீட்பீர்கள்.
அனுஷம்: மனதில் இருந்த பயங்கள் தீரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.
கேட்டை: பல நாட்கள் சந்திக்காத நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள்.

தனுசு:

மூலம்: பிறரது குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பூராடம்: வாக்கு வாதம், வாக்குறுதி இரண்டும் இன்றைக்கு வேண்டாம்.
உத்திராடம்,1: பழைய நண்பர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: கடந்த இரண்டு நாளாக இருந்த வருத்தங்கள் குறையும்.
திருவோணம்: எதிர்பார்த்த வேலை ஒன்று முடிய அதிகம் செலவாகலாம்.
அவிட்டம்,1,2: மகன்/ மகளிடமிருந்து மனநிறைவளிக்கும் செய்தி வரும்.

கும்பம்:

அவிட்டம், 3,4: இனிமையான நாள். எதிர்பார்த்த சிறப்புகள் கைகூடும்.
சதயம்: பெண்கள் செய்த முயற்சிகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்.
பூரட்டாதி,1,2,3: இழந்த பொருட்கள் கிடைக்கும். சகோதர ஒற்றுமை உண்டு.

மீனம்:

பூரட்டாதி, 4: புதிய முயற்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நன்மை உண்டு.
உத்திரட்டாதி: குழந்தைகளால் ஏற்பட்ட கவலை தீரும். நிம்மதி வரும்.
ரேவதி: வழக்குகளில் திசைதிருப்பம் ஏற்படும். சுபச்செய்தி உண்டு.

< Most Related News >

Tags :-4th December Today Raasi Palankal

Related posts

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Tharshi

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிவாயு நிறுவனம்..!

Tharshi

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

Leave a Comment