இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்திய குத்து சண்டை போட்டியின் பழம்பெரும் பயிற்சியாளர் ஓ.பி. பரத்வாஜ், உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று (வெள்ளி கிழமை) தனது 82 ஆவது வயதில் காலமானார்.
இவர் இந்திய குத்து சண்டை போட்டியில் “துரோணாச்சார்யா” விருது வென்ற முதல் பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றதுடன், கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
2 comments