குறும்செய்திகள்

சிம்புவின் “மஹா” படத்துக்கு கோர்ட் தடையா..?

Simbu Hanshika Maha movie productions explain over court order

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்பில் உருவாகியுள்ள “மஹா” திரைப்படத்தின் வெளியீடு குறித்து, மக்களிடத்திலும்.. ஊடகங்கள் இடையேயும் சில தவறான தகவல்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், “எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட்” தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் “மஹா” படத்துக்கு தடை செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இது குறித்தான உண்மை தகவல்களை வெளியிட கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, “எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட்” தயாரிப்பு நிறுவனம் இது குறித்து மேலும் கூறுகையில்..,

“மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியீட்டிற்கு முழுமையான நிலையில் தயாராக உள்ளது. இயக்குநர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது சில குற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் தரப்பின் சார்பில், தயாரிப்புத் தரப்பு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 13/05/2021 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வகையில் மஹா படத்தின் மீது உயர் நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. உயர்நீதி மன்றம் சார்பில் வழக்கு குறித்து இயக்குநர் தரப்பு வழக்கறிஞர் வாயிலாக சட்ட பூர்வ அறிவிப்பு கடிதம் பெறப்பட்டது. அதில் வழக்கின் முறையான அடுத்த விசாரணை 19/05/2021 நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் பொருட்டு எங்கள் தரப்பில், உடனடியாக வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாயிலாக பதில் பிரமாண பத்திரம் 18/05/2 021 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு விசாரணை 19/05/2019 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மஹா படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றம், ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

மேற்கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மஹா படத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

அத்துடன், மேற்கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று வரை மஹா படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஒரு தடையையும் இதுவரை பிறப்பிக்கவில்லை என்பதே உறுதியான தகவலாகும்.

Simbu Hanshika Maha movie productions explain over court order

Related posts

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

சூப்பரான முட்டை காளான் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாமா..?

Tharshi

தனுஷ்க குணதிலக்கவுக்கு 150,000 டொலர்களை வழங்கிய இலங்கை பெண்..!

Tharshi

3 comments

Leave a Comment