குறும்செய்திகள்

வவுனியாவில் இளவயதினர் 7 பேர் கொரோனா வைரஸுக்கு பலி..!

7 teenagers die of corona virus in Vavuniya

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே 20 வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளவயதினை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 544 பேரும், வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும், செட்டிகுளம் பிரிவில் 34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 19 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும், 31-40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்கு மேற்பட்ட 197 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் ஒருவரும் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 6 பேர் என மொத்தம் 7 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 teenagers die of corona virus in Vavuniya

Related posts

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்ச்சை நடிகரின் படம்..!

Tharshi

2021 இன் முதல் கங்கண சூரிய கிரகணம் : கனடா – ரஷ்யா நாடுகளில் முழுமையாக தெரிந்தது..!

Tharshi

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி வீரர்களின் விவரம்..!

Tharshi

Leave a Comment