குறும்செய்திகள்

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது..!

Drug dealer arrested in Colombo Mattakkuliya

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக வத்தளை, மட்டக்குளி, முகத்துவாரம் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Drug dealer arrested in Colombo Mattakkuliya

Related posts

உலகம் முழுவதும் 23.13 கோடியாக உயர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!

Tharshi

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Putin Invites Trump to Moscow for Second Meeting After Washington Postponed Plans

Tharshi

1 comment

Leave a Comment