குறும்செய்திகள்

ரோஜா சீரியல் நடிகையை எல்லாம் முடிந்த நிலையில் கை கழுவி வெளிநாடு பறந்த காதலன்..!

Roja Serial Priyanka Nalkari Lifestyle

வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு படாதபாடு பட்டு வரும் நிலையில் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து விடுகின்றனர்.

சொல்லப் போனால், இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பல நடிகைகள் தொடர்களில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையில் தொடர்களுக்கு எல்லாம் அடித்தளமாக அமைந்தது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தான் ஆகும். இந்த சேனலில் முதலில் ஒளிப்பரப்பான தொடர்கள் மூலமே மக்கள் மத்தியில் தொடர்கள் பிரபலமடைந்தது.

ஆனால் தற்போது இந்த சேனலை காட்டிலும் பல சேனல்கள் தொடர்களை தொகுத்து வழங்குவதில் முதன்மையாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்த சேனலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னணி தொடராக ரோஜா தொடராகும். மக்கள் மத்தியில் இந்த தொடர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் இந்த தொடரில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களே ஆகும்.

அந்த அளவிற்கு தொடரில் இவர்களது நடிப்பு மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் கதையின் நாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்காவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவரது திருமண வாழ்க்கைத்தான் கேள்விக்குறியாகி போயுள்ளது. தெலுங்கில் சின்னத்திரை தொடர்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த தமிழில் இந்த தொடரில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

இப்படி இருக்கையில் பிரியங்கா தெலுங்கில் சக நடிகரும் பிரபல தொடர் கதாநாயகனாக நடித்து வரும் ராகுல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்த வகையில் இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதைத் தொடர்ந்து வேலை காரணமாக மலேசியா சென்ற ராகுல் அதன் பின் பிரியங்காவை கண்டு கொள்ளவில்லை போலும் அதனை தொடர்ந்து அங்கு நல்ல வசதியான பெண்ணை பார்த்து அவருடன் காதலில் விழுந்து விட்டதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில் இது கூறித்து அவரை பல முறை தொடர்பு கொண்ட போதும் அவரிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தன்னை மறுத்து விட்டார் என புரிந்து கொண்டு தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது அவரது முழுகவனமும் தொடர்களில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் வெள்ளித்திரையில் நடிப்பதாகவே உள்ளது.

(Copied)

Roja Serial Priyanka Nalkari Lifestyle

Related posts

மஞ்சள் பூஞ்சை நோய் யாரை எல்லாம் தாக்கும் தெரியுமா..!

Tharshi

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 123 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு..!

Tharshi

Leave a Comment