குறும்செய்திகள்

ஷங்கரின் புதிய படத்தில் கை கோர்க்கும் ஆலியா பட்..!

Alia Bhatt female lead in shankars next Movie

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “இந்தியன் 2” படமானது, விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராம்சரணும், நடிகை ஆலியா பட்டும் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் “ஆர்.ஆர்.ஆர்” படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்துபோன ராம்சரண், அவரை ஷங்கர் படத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Alia Bhatt female lead in shankars next Movie

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்..!

Tharshi

“இன்னக்கி நல்ல நாள்” : நியாபகப்படுத்திய கணவன் மனைவி ஜோக்ஸ்..!

Tharshi

விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனைக்கு தீர்வு..!

Tharshi

Leave a Comment