குறும்செய்திகள்

தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் : பொலிஸ் அதிகாரி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

Graves discovered at the house of a former police officer

எல் சால்வடார் நாட்டில், முன்னாள் பொலிஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் இருக்கும் குட்டி நாடு எல் சால்வடார். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 64.5 லட்சம் தான். ஆனாலும், பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் வன்முறை அதிகம்.

குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறை இந்த நாட்டில் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடோரில் இருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாவேஸ் சான்ச்சுவாபா நகரம். இப்பகுதியில் வசித்து வந்தவர் ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோ.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான இவர்,கடந்த சில வாரங்களுக்கு முன், தாய்-மகள் என இருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது மேலும் சில பாலியல் வழக்குகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் காணாமல் போன இடத்தில் கண்டறியப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோவுடன் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப் போனதால் பொலிசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது இருவரையும் கொலை செய்ததை அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒப்புக்கொண்டார். மேலும், அவர்களின் உடலைத் தனது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

மேலும், அவர்கள் காணாமல் போன இடத்தில் கண்டறியப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோவுடன் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போனதால் பொலிசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது இருவரையும் கொலை செய்ததை அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒப்புக்கொண்டார். மேலும், அவர்களின் உடலைத் தனது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் அவரது வீட்டின் பின்புறத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்குத் தோண்டியபோது, பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேரின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சுமார் 24 பேரின் உடல் உறுப்புகளும் அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது எல் சால்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் ஒன்பது பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சில சடலங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளில் மாயமான பலரது குடும்பத்தினரும் அந்த வீட்டின் அருகே குவிந்துள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.

Graves discovered at the house of a former police officer

Related posts

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Tharshi

மொபைலில் பிஎஸ் கேம்களை வெளியிட சோனி திட்டம்..!

Tharshi

“அப்பா.. தண்ணி குடிச்சீங்களா? – இறந்த மகனின் கேள்விகள் : மகனுக்காக விவேக்கின் உருக வைக்கும் கட்டுரை..!

Tharshi

1 comment

Leave a Comment