குறும்செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Slightly less corona impact in Tamil Nadu today

இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஒரே நாளில் 35,483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

“தமிழகம் முழுவதும் 1,76,824 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 35,476 வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் என மொத்தம் 35,483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18,42,344 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 5,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5,169 ஆக உள்ளது.

12 வயதிற்குட்பட்ட 1,389 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 114 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 81 பேர் உயிரிழந்தனர்.

அரசு மருத்துவமனைகளில் 240 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 182 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் மேலும் 422 பேர் உயிரிழந்தநிலையில் பலியானோர் எண்ணிக்கை 20,468 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 25,196 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,27,733 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,94,143 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 2031 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 9425 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 251 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Slightly less corona impact in Tamil Nadu today

Related posts

தோனி – பிரதமர், விஜய் – முதல்வர் : வைரலாகும் போஸ்டர்..!

Tharshi

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Tharshi

தெற்கு சூடானில் இனவாத மோதல் : 13 பேர் பலி..!

Tharshi

Leave a Comment