குறும்செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன்..!

The soon to be launched Samsung Galaxy F42 5G smartphone

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் SM-E426B/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன்.

மேலும், மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் உடன் அட்ரினோ 619ஜிபியு வசதியும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.

எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அத்துடன், சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது

அதுமட்டுமல்லாமல், சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மேலும், டஸ்கி பிளாக் மற்றும் மேஜிக் ஒயிட் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி மாடல். 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, ஜிபிஎஸ் + குளோனாஸ்,யூ.எஸ்.பி டைப்-சிபோர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

The soon to be launched Samsung Galaxy F42 5G smartphone

Related posts

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்பட்ட முதல் மரணம்..!

Tharshi

ஏமனில் 367 அடி மர்ம கிணறு : வீசும் துர்நாற்றம் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!

Tharshi

சாவகச்சேரியில் இயங்கிவரும் இசைத்தமிழ் கலைக்கூட மாணவிகளின் பயிற்சி நேரக் காணொளி..!

Tharshi

Leave a Comment