குறும்செய்திகள்

25-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

25th May Today Raasi Palankal

இன்று மே 25.2021

பிலவ வருடம், வைகாசி 11, 25.5.2021
செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:56 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:13 வரை,
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : வைகாசி விசாகம், நரசிம்ம ஜெயந்தி

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு சரியாகும். பணியாளர்களுக்குப் பொறுப்புத் தேவை.
பரணி: அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.
கார்த்திகை 1: உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியாளர்களின் மதிப்புக்கூடும். முயற்சி ஒன்று வெற்றிபெறும்.
ரோகிணி: வெறுத்தவர்களை மாற்றுவீர்கள். மன மகிழ்ச்சி கூடும்நாள்.
மிருகசீரிடம் 1,2: உடல்நலம் மேம்படும். பணியில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியிடத்தில் தவறான முடிவு எடுக்காமல் கவனமாக இருங்கள்.
திருவாதிரை: உற்சாகமடைவீர்கள். கடினமாக உழைக்க வேண்டி வரும்.
புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சி நிலைக்கும். பிரச்னைக்குப் புதிய தீர்வு காண்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: புதியவரின் நட்பால் நன்மை உண்டு. ஆன்மிக நாட்டம் கூடும்.
பூசம்: நிம்மதி மீளும். வாக்குவாதமும், வேலைச்சுமையும் குறையும்.
ஆயில்யம்: எதிலும் அவசரம் வேண்டாம். நண்பர்களை நம்பலாம்.

சிம்மம் :

மகம்: இளைஞர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
பூரம்: ஏற்றம் பெறும் நாள். நிதி வளர்ச்சி காணலாம். போட்டியில் பங்கேற்பீர்கள்.
உத்திரம் 1: வெற்றி வரும். தொழில் லாபம் தரும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பர்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அமைதியான நாள். கவலையிலிருந்து விடுபடுவீர்கள்.
அஸ்தம்: தொழில் செழிக்கும். வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.
சித்திரை 1,2: பணியாளர்கள் நிம்மதி காண்பீர்கள். பழைய செயல்கள் புகழ் தரும்.

துலாம்:

சித்திரை 3,4: பெண்களால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நிறைவேறும்.
சுவாதி: பரபரப்பான நாள். எதிரிகளைப் பக்குவமாகச் சமாளிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: புதிய நண்பர்களை உங்கள் வட்டத்தில் சேர்ப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பொது நலத்தில் ஆர்வம் கூடும். களைப்பு மிகுந்த நாள்.
அனுஷம்: பலநாள் தொடர்ந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.
கேட்டை: மதியத்துக்குப் பிறகு நற்செய்தி ஒன்று வந்து சேரும்.

தனுசு:

மூலம்: வழக்குகள் திசை திரும்பக்கூடும். நேர்மறை எண்ணங்கள் வரும்.
பூராடம்: உள்ளுணர்வு காரணமாக ஒரு முடிவு எடுத்துப் பலனடைவீர்கள்.
உத்திராடம் 1: குடும்ப ஒற்றுமை பலப்படும்.. இளைஞர்களின் மகிழ்ச்சி கூடும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பணியாளர்களின் பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
திருவோணம்: வெளிநாட்டு முயற்சியில் வெற்றிக்கான அறிகுறி தோன்றும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் குழப்பம் நீங்கி இன்று அமைதி திரும்பும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: விரும்பிய முன்னேற்றம் காண பாடுபட வேண்டிவரும்
சதயம்: கோபத்தை குறையுங்கள். யாரையும் புண்படுத்திப் பேச வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: பிள்ளைகளின் வருங்காலம் குறித்த பயம் தீர்ந்துபோகும்.

மீனம்:

பூரட்டாதி 4: என்றோ பேசியவற்றால் இன்றைக்குத் தொல்லை வரலாம்.
உத்திரட்டாதி: இளம் வயதினருக்குக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும்.
ரேவதி: மகிழ்ச்சி தரும் செலவு வரும். கலகலப்பான நிகழ்வுகள் நடக்கும்.

25th May Today Raasi Palankal

Related posts

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 க்யூட் போட்டியாளர்களின் பின்னணி..!

Tharshi

யாழ். தனியார் விடுதியில் வாள் வெட்டு..!

Tharshi

Leave a Comment