பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என சொல்லி விட்டாராம் நடிகை ஒருவர்.
அதாவது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமான நடிகை, சமீபத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தாராம்.
ஆனால் தற்போது பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க வந்த வாய்ப்பை இவர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
அதற்குக் காரணம் அந்த நடிகருக்கும் இவருக்கும் 10 வயதுதான் வித்தியாசம் என சொல்கிறாராம் நடிகை.
ஆனால் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் அவரோடு நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளாராம்.