குறும்செய்திகள்

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை பனைமரத்துடன் நசுக்கி கொலை : அமெரிக்காவிலிருந்து பிளான் போட்ட கணவருக்கு வலை வீச்சு..!

Santhanams relation woman Jayabharathi murder case

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை, லாரியை ஏற்றி கொன்றுள்ளதுடன், பனைமரத்துடன் அந்த பெண்ணின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

இக்கொடூர சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்..,

நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் ஜெயபாரதி. திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் விஷ்ணு பிரகாஷ். அமெரிக்க மாப்பிள்ளை.

கடந்த 2005-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

ஆனால், கணவனுடன் ஜெயபாரதிக்கு ஏதோ பிரச்சனை வந்துள்ளது. அதனால், 3 வருஷத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள அம்மா வீட்டுக்கு ஜெயபாரதி வந்துவிட்டார். சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந் நிலையில், ஜெயபாரதி ஒருநாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வண்டி மோதி அங்கேயே உடல் நசுங்கி இறந்து விட்டார். இதனால் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது விபத்து அல்ல கொலை என்று ஜெயபாரதியின் அண்ணன் பொலிசாரிடம் புகார் கொடுத்தார்.

அதன் பின்பு நடிகர் சந்தானத்துக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. இதனால், சந்தானத்தின் உதவியால் மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கும் விஷயம் சென்றது. போதிய ஆதாரங்களும் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது.

“அம்மா வீட்டுக்கு போ” என்று கணவர் துரத்தி விட்டதால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளார் ஜெயபாரதி. அதனால் கணவர் விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி உள்ளது. ஜெயபாரதியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து பிளான் செய்துள்ளார்.

அதன்படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், கேஸை முடித்து விடுவார்கள் என்று எண்ணி, பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர். பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர்.

அந்தவகையில், ஒருநாள் முழுக்க ஜெயபாரதியை லாரியிலேயே ஃபாலோ செய்துள்ளார் பிரசன்னா. பிறகுதான் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருக்கும்போது, மோதியுள்ளார். அதுமட்டுமல்ல, அங்கிருந்த ஒரு பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்.

இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, செந்தில்குமார், டிரைவர் பிரசன்னாவை பொலிசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் எஸ்கேப் ஆகி உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள்.

அத்துடன், இப்படி ஒரு கொலைக்கு அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பிளான் செய்த விஷ்ணுபிரகாஷ்த்தை, தமிழகம் வரவழைத்து விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Santhanams relation woman Jayabharathi murder case

Related posts

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு..!

Tharshi

18-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது..!

Tharshi

Leave a Comment