குறும்செய்திகள்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய சியோமி எம்ஐ 11 சீரிஸ்..!

Xiaomi has sold over 3 million

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா மாடல்கள் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது, சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச விற்பனையில் 30 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. எம்ஐ 11 சீரிசில் எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்த விற்பனையில் சீனாவில் மட்டும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற விற்பனை விவரங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருக்கின்றன.

மூன்று மாடல்களும் தனித்தனியே எத்தனை யூனிட்கள் விற்பனையாகின என்ற தகவலை சியோமி வெளியிடவில்லை. சீன சந்தையில் பல்வேறு உயர் ரக மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் சியோமி, விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத்தவிர, சீனா மட்டுமின்றி ஐரோப்பா உள்பட பல பகுதிகளில் வியாபாரத்தை நீட்டிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Xiaomi has sold over 3 million

Related posts

யூடியூப் கிரியேட்டர்களுக்காக சமீபத்தில் வெளியான புதிய அப்டேட்..!

Tharshi

24-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஒரே நேரத்தில் பிறந்து மாறிய குழந்தைகள் : ஆண் குழந்தைக்கு அடம்பிடிக்கும் அம்மாக்கள்..!

Tharshi

Leave a Comment