குறும்செய்திகள்

இலங்கை, ஜப்பான் பயணங்களை தவிர்க்க வேண்டும் : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா..!

US warns against travel to Japan and Srilanka

தற்போதைய சூழலில், ஜப்பானில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இலங்கையில் 2,971 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருநாடுகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும்பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஜப்பானில் தற்போதைய சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

US warns against travel to Japan and Srilanka

Related posts

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

2024 இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் டிரம்ப் விடுக்கும் அறிவிப்பு..!

Tharshi

கொரோனா பொது நிவாரண நிதி : நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Tharshi

Leave a Comment