குறும்செய்திகள்

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல் : புதிய சாதனை படைத்த மெஹதி ஹசன்..!

Miraz second Mustafizur ninth in ICC ODI bowlers ranking

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.

அதாவது, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம் பிடித்த 3-வது வங்காளதேச வீரர் எனும் பெருமையை மெஹதி ஹசன் பெற்றார். இதற்கு முன் சஹிப் அல் ஹசன் 2009ம் ஆண்டில் முதலிடத்திலும், 2010ம் ஆண்டும் அப்துர் ரஹிம் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்

மேலும், இலங்கைக்கு எதிராக தாகாவில் நடந்து வரும் ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து மெஹதி ஹசன் 3 இடங்கள் நகர்ந்து 725 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அந்தவகையில், முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரஹ்மானும், 4-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மாட் ஹென்றியும் உள்ளனர். 5-வது இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். 6 முதல் 10 இடங்கள் வரை முறையே காகிசோ ரபாடா, கிறிஸ் வோக்ஸ், ஹேசல்வுட், கம்மின்ஸ் உள்ளனர்.

அத்துடன், வங்காள தேச இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 8 இடம் நகர்ந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு 5-வது இடம் வரை ரஹ்மான் முன்னேறியதுதான் சிறந்ததாகும்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய அணியி்ன் கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடனும், 825 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், ஆல்ரவுண்டர் வரிசையில், வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 295 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். மற்ற எந்த இந்திய வீர்களும் இதில் இல்லை.

Miraz second Mustafizur ninth in ICC ODI bowlers ranking

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

Tharshi

மாரத்தான் போட்டியின் போது திடீரென தாக்கிய இயற்கை சீற்றம் : சீனாவில் 21 பேர் பலி..!

Tharshi

Leave a Comment