குறும்செய்திகள்

48 வது சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்னம் பதவிப்பிரமாணம்..!

Sanjaya Rajaratnam sworn in as 48th Attorney General

நாட்டின் 48வது சட்ட மா அதிபராக, ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய ராஜரத்னம் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, றோயல் கல்லூரிகளில் கல்வி கற்றுள்ள அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். திரு.ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.

அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்களில் ஆலோசகர் பதவியை வகித்துள்ள அவர், இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினருமாவார்.

Sanjaya Rajaratnam sworn in as 48th Attorney General

Related posts

தடுப்பூசி முதல் டோஸ் போட்டு மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்..!

Tharshi

பெண்களின் இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழிமுறை..!

Tharshi

Allen Weisselberg, Trump Organization’s Finance Chief, May Be Questioned

Tharshi

Leave a Comment