குறும்செய்திகள்

28-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

28th May Today Raasi Palankal

இன்று மே 28.2021

பிலவ வருடம், வைகாசி 14, 28.5.2021
வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி மதியம் 12:56 வரை,
அதன்பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் இரவு 11:43 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : முகூர்த்த நாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நிதி நிலைமை பற்றி இருந்து வந்த டென்ஷன் குறையும்.
பரணி: என்றைக்கோ உழைத்ததன் பலனை இன்று பெறுவீர்கள்.
கார்த்திகை 1: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்ற பயம் வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை வராது
ரோகிணி: நன்மைகள் வருவதில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம்
மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணைக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சிறுசிறு பிரச்னைகள் குறையத் தொடங்கும். நல்ல திருப்பம் வரும்.
திருவாதிரை: மேலதிகாரிகள் உங்களிடம் பரிவாக நடந்து கொள்வார்கள்.
புனர்பூசம் 1,2,3: சார்ந்துள்ள துறையில் ஓரளவு வளர்ச்சியைக் காண்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வேலைப்பளு கூடுதலாகும். உழைப்புக்கேற்ற பலன் உண்டு.
பூசம்: உணவினால் வயிற்றுப் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள்.
ஆயில்யம்: முந்தைய டென்ஷன்கள் தீரும். கலகலப்பான விஷயங்கள் நடக்கும்.

சிம்மம் :

மகம்: எளிமையாக முயற்சி செய்து பெரிய நன்மையை அடைவீர்கள்.
பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கில் வெற்றி வரும்
உத்திரம் 1: பிள்ளைகளால் உங்களின் கவுரவம் உயரும். திடீர் யோகம் கிட்டும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். நன்மைகள் நடக்கும்.
அஸ்தம்: குழப்பம் நீங்கிப் புதிய பாதை புலப்படும். இனிய அனுபம் கிடைக்கும்.
சித்திரை 1,2: நண்பர்களுக்கு உதவுவீர்கள். சற்று அதிகச் செலவு ஏற்படும்.

துலாம்:

சித்திரை 3,4: நேர்மையான உழைப்பை வைத்துப் பதவி உயர்வு கிடைக்கும்.
சுவாதி: சூழ்நிலைகளை நன்கு பயன்படுத்தி கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: அனுபவமிக்க முன்னோடிகளின் ஆலோசனைகளை பெறுவீர்கள்.
அனுஷம்: பலகாலம் சந்திக்காத குடும்ப உறவினரைச் சந்திப்பீர்கள்.
கேட்டை: வாழ்க்கை முறையில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

தனுசு:

மூலம்: முயற்சிகள் ஓரளவு வெற்றி தரும். நன்மைகள் கைகூடும்.
பூராடம்: பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்
உத்திராடம் 1: பேச்சினால் வெற்றி பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நிதானமான முன்னேற்றம் உண்டு. உழைப்பு அதிகரிக்கும்.
திருவோணம்: குடும்ப நபர்களிடையே இனிய சூழ்நிலை நிலவும்.
அவிட்டம் 1,2: புது முயற்சிகளைத் தொடங்கி எளிதாக வெற்றி காண்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிலருக்கு திடீர்ப் பணவரவு உண்டாகும். கவலைகள் தீரும்.
சதயம்: உறவினர், நண்பர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் மாறும். எண்ணம் ஈடேறும்.

மீனம்:

பூரட்டாதி 4: திட்டங்கள் வெற்றி பெறும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
உத்திரட்டாதி: மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கனவு நனவாகும்
ரேவதி: பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி மீளும். மனம் மகிழும்.

28th May Today Raasi Palankal

Related posts

ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்கும் இன்ஸ்டாகிராம்..!

Tharshi

வயதானதால் சம்பளத்தை குறைத்த டோலிவுட்டின் பிரபல நடிகை..!

Tharshi

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள்..!

Tharshi

Leave a Comment