குறும்செய்திகள்

31-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st May Today Raasi Palankal

இன்று மே 31.2021

பிலவ வருடம், வைகாசி 17, 31.5.2021
திங்கட்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி காலை 7:46 வரை,
அதன்பின் சஷ்டி திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 9:29 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : திருவோண விரதம், கரிநாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சிகரமான விஷயம் நடக்கும்.
பரணி: பணியாளர்களுக்கு அதிகாரியைப் பற்றி இருந்த வருத்தம் நீங்கும்
கார்த்திகை 1: மற்றவர்களிடம் கனிவாகப் பழகி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வருமானம் பெருகும். நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும்.
ரோகிணி: நீண்ட காலத் தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேற்றைய வருத்தங்கள் தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உயர்ந்தோர் ஆலோசனையுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
திருவாதிரை: அலட்சியம் காரணமாகச் ஏமாற்றம் வராமல் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: கடன் வாங்குமுன் பலமுறை யோசித்தபிறகு வாங்குங்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வீட்டிலும் வெளியிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பூசம்: பணியாளர்களுக்கு உயர் அதிகாரியுடன் எதிர்பாராத சந்திப்பு உண்டு.
ஆயில்யம்: திறமை வெளிப்படும். இளைஞர்களின் புகழ் அதிகரிக்கும்.

சிம்மம் :

மகம்: ரகசியங்கள் கசியாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரம்: சகிப்புத் தன்மை அதிகமாகும். பணியில் அலட்சியம் வேண்டாம்.
உத்திரம் 1: யாரையும் கேலி செய்து பேச வேண்டாம். முயற்சியில் வெல்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சி காரணமாக நெருங்கிய உறவினர் வருகை உண்டு.
அஸ்தம்: தோல்வியுற்ற விஷயத்தில் புதுக்கோணத்தில் சிந்தித்து வெல்வீர்கள்.
சித்திரை 1,2: உங்களுக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பாராத சந்திப்பு காரணமாக சந்தோஷம் ஏற்படும்
சுவாதி: பல வேலைகளையும் திறம்படச் செய்து பாராட்டு பெறுவீரகள்.
விசாகம் 1,2,3: நியாயமான செலவினங்கள் அதிகரிக்கும். பயங்கள் நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: சிரமங்கள் தீரும். நம்பியவர்கள் கைகொடுக்காமல் போகலாம்.
அனுஷம்: பெண்கள் உதவி செய்வர். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
கேட்டை: வெற்றி கிடைக்கும். பெண்களுக்குப் புகழ் கூடும். பொறுப்பு அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: அலைச்சல் காரணமாகக் களைப்பு வரும். போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
பூராடம்: யாருடனும் விவாதம் வேண்டாம். பழிவரும் செயல் செய்யாதீர்கள்.
உத்திராடம் 1: குடும்பம் பற்றி சிறு கவலை ஒன்று வந்து நீங்கும். பயம் தீரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நண்பர்களால் பிரச்னைகள் தீரும். நிம்மதி கூடுதலாகும்.
திருவோணம்: யாருடைய ஆசை வார்த்தையையும் நம்பி ஏமாற வேண்டாம்.
அவிட்டம் 1,2: அலைச்சலுக்கும் முயற்சிக்கும் உரிய நற்பலன் கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முயற்சியை அதிகரியுங்கள். நேர்மையுடன் செயல்படுவீர்கள்.
சதயம்: நல்லவர்கள் செய்யும் உதவியும் ஆதரவும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
பூரட்டாதி 1,2,3: அதிகமாக உழைப்பீர்கள். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலம் தொந்தரவு வரும்.
உத்திரட்டாதி: நற்செய்தி ஒன்று வரும். பணியிட சிரமத்தைச் சமாளித்துவிடுவீரகள்.
ரேவதி: அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

31st May Today Raasi Palankal

Related posts

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

வழுக்கையில கூட முடி வளர வேண்டுமா..?

Tharshi

நாட்டில் மேலும் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 31 பேர் பலி..!

Tharshi

Leave a Comment