குறும்செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய நபர் கைது..!

Arrest of person brewing alcohol through cooker during curfew

கடையநல்லூர் பகுதியில் வீட்டில் வைத்து, கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை பொலிசார் கைது செய்தனர்.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுக்கும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த கடையநல்லூர் பொலிசார், வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய மேலக்கடையநல்லூர் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் (36) வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கடையநல்லூரை சேர்ந்த கனி என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Arrest of person brewing alcohol through cooker during curfew

Related posts

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்ச்சை நடிகரின் படம்..!

Tharshi

காதல் விவகாரத்தால் வந்த வினை : புலம்பித்தள்ளும் நடிகை..!

Tharshi

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை கொன்று வீசிய தாய்..!

Tharshi

Leave a Comment