குறும்செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை..!

Man and his son suicide after wife killed by Covid19 in Thanjavur

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே, கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்..,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (வயது 57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இதற்காக அவர் தனது மனைவி மீனா (45) மற்றும் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 மாதத்துக்கு முன்பு மீனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா இறந்தார். இதைதொடர்ந்து அங்கேயே கொரோனா விதிமுறைப்படி மீனாவுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.

அத்துடன், மீனாவின் அஸ்தியை தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்தில் கரைக்க கனகராஜன் முடிவு செய்தார். அதன்படி தனது மகன் மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது.

இதற்கிடையே மீனாவின் மறைவால் கனகராஜன் கடந்த 1 மாதமாகவே மிகுந்த மனவேதனையில் காணப்பட்டார். யாரிடனும் சரிவர பேசாமல் விரக்தியில் இருந்தார். இதேப்போல் மனோஜ்குமாரும் தாயின் பிரிவால் துயரத்தில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு நரங்கிப்பட்டியில் கனகராஜன், மனோஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜன், மனோஜ்குமார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொரோனாவுக்கு பெண் இறந்த சோகத்தில் கணவன், மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Man and his son suicide after wife killed by Covid19 in Thanjavur

Related posts

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் : எம்.ஏ.சுமந்திரன்..!

Tharshi

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi

தொற்றுக்குள்ளான குழந்தைக்கு நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலை..!

Tharshi

Leave a Comment