யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் அரச நிறுவனமான “சீனா ஸ்டேட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் இஞ்சினியெரிங் கார்பரேஷன்” நிறுவனத்தின் பெயர்ப்பலகையில், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன், அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளதோடு தனியான பெயர் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.