குறும்செய்திகள்

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான சில சித்த மருத்துவ முறைகள்..!

Siddha Medical methods to prevent Corona infection

கொரோனா நோய்த் தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

ஆனால், பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது.

ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும்.

மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

சித்த மருத்துவம்

அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன.

அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

ஆய்வு

இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள், வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக் கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

Siddha Medical methods to prevent Corona infection

Related posts

வண்டலூர் சிங்கங்களை மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் : இம்ரான்கான் எச்சரிக்கை..!

Tharshi

தனி விமானத்தில் அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்..!

Tharshi

Leave a Comment