குறும்செய்திகள்

03-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

3rd June Today Raasi Palankal

இன்று ஜூன் 03.2021

பிலவ வருடம், வைகாசி 20, வியாழக்கிழமை,
3.6.2021, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 6:26 வரை,
அதன்பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11:04 வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நிம்மதியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற பணிகள் முடியும்.
பரணி: சிறிய முன்னேற்றம் உண்டு. திட்டங்கள் நிறைவேற்றப் பாடுபடுவீர்கள்.
கார்த்திகை 1: உறவினர் பற்றிய எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும். சேமிப்பு கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மேலதிகாரி பாராட்டுவார். குழந்தைகள் பற்றி மகிழ்ச்சி ஏற்படும்.
ரோகிணி: எதிர்பாலினத்தவர்களால் நன்மை உண்டு. நேரவிரயம் ஆகும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பப் பிரச்னைகள் பற்றிய பல நாள் கவலை நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சகோதரர்கள் பற்றிக் கவலையடைந்த நிலைமை மாறும்.
திருவாதிரை: குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். கடன் அனுமதி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: காதல் விவகாரத்தில் பயம் நீங்கும். பயணம் தள்ளிப்போகும்.

கடகம்:

புனர்பூசம் 4: பிள்ளைகள் பற்றிய நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.
பூசம்: பெரியவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைரியமாக இருப்பீர்கள்
ஆயில்யம்: வேண்டாத செலவுகளை குறைப்பது நல்லது. பொறுமை தேவை.

சிம்மம் :

மகம்: பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
பூரம்: மன நிம்மதியும், அமைதியும் பெறுவீர்கள். சிறிய முயற்சி வெல்லும்.
உத்திரம் 1: சமீபத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் குறையும். உற்சாகம் கூடும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தந்தையின் ஆதரவு உண்டு. அரிய செயல் செய்து பாராட்டு பெறுவீர்கள்.
அஸ்தம்: மேன்மையும், வளர்ச்சியும் கிடைக்கும். பயம் நீங்கும்.
சித்திரை 1,2: புதிய வாகனம் வாங்கும் முயற்சியைத் தள்ளிப்போடலாம்.

துலாம்:

சித்திரை 3,4: குதுாகலமும் உற்சாகமும் எப்போதும்போல் இருக்கும்.
சுவாதி: கடினமாக உழைக்க வேண்டி வரும். மற்றவர்கள் பணிவார்கள்.
விசாகம் 1,2,3: நிதி வசதி சற்று மேம்படும். ஆரோக்கிய கவலை குறையும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்க்கைத்துணை உங்கள் மீது பாசத்துடன் நடந்து கொள்வார்.
அனுஷம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விரக்தி மனப்பான்மை குறையும்.
கேட்டை: நல்லவர்களுக்கு உதவி செய்து அவர்களின் ஆசியை பெறுவீர்கள்.

தனுசு:

மூலம்: அலுவலகத்தில் எதிர்பாலினத்தினரிடம் உஷாராக இருக்க வேண்டும்.
பூராடம்: பங்கு மார்க்கெட் விவகாரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
உத்திராடம் 1: பணிவான செயல்களால் பிறரிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: அலுவலக சகாக்களின் உதவியும் ஆதரவும் அதிகரிக்கும்.
திருவோணம்: நண்பர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்து பாராட்டு பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: முதலீட்டு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: பணியிடத்தில் பிரகாசிப்பீர்கள். தொழிலில் லாபம் எதிர்பார்க்கலாம்.
சதயம்: நண்பர்களுக்குக் கைமாற்றுத் தருவதில் மிகவும் கவனமாக இருங்கள்.
பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் பங்குப்பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மீனம்:

பூரட்டாதி 4: புதிய பொருள் எதுவும் வாங்குவதற்கு ஆலோசிக்க வேண்டும்.
உத்திரட்டாதி: பணியாளர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
ரேவதி: கடுமையாக உழைக்க வேண்டி வரும். உற்சாகம் குறையாது.

3rd June Today Raasi Palankal

Related posts

01-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

விரைவில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..!

Tharshi

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

Leave a Comment