குறும்செய்திகள்

கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் பலி..!

Corona infection kills 48 more

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கடந்த இரு தினங்களாக மூவாயிரத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 3,398 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் ஒரு இலட்சத்து 99,242 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 269 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.

இன்று தொற்றுக்குள்ளான 1884 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 62 397 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 34 574 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4553 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Corona infection kills 48 more

 

Related posts

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்…!

Tharshi

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது..!

Tharshi

ஒரு வாரத்திற்கு சில முக்கிய தனியார் வங்கிகள் சேவை இடைநிறுத்தம்..!

Tharshi

Leave a Comment