குறும்செய்திகள்

துளி கூட மேக்கப் இல்லாத ஆல்யா மானசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Alya Manasa without Makeup Look

ஆல்யா மானசா, துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ வெளியானதால் அதைப் பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் “ராஜா ராணி” சீரியல் மூலமாக புகழ் ஆனவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார்.

ஆல்யா மானசா தற்போது “ராஜா ராணி 2” சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அந்த தொடரின் டஷூட்டிங் கொரோனா லாக் டவுன் காரணமாக ஒரு ரிசார்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் ஆல்யா அதில் பங்கேற்கவில்லை. அவர் போனில் பேசுவது போல மட்டும் காட்டப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா லாக்டவுனில் ஆல்யா மானசா அவரது குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். லாக்டவுனில் அவர்கள் செய்யும் விஷயங்களை வீடியோவாக எடுத்து youtube சேனலில் வெளியிட்டும் வருகிறார் சஞ்சீவ்.

இந்நிலையில், ஆல்யா மானசா சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவரது மகள் ஐலாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தவர்களுக்கு தான் ரிட்டர்ன் கிப்ட் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த போட்டோவில் ஆல்யா மானசா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இனி என்ன நடந்தது என சொல்லவா வேண்டும். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

இத்தனை நாள் முழுமையாக மேக்கப் போட்டு தான் சீரியலில் நடித்து வந்தீர்களா என கேட்டு கலாய்க்க தொடங்கி விட்டனர்.

Alya Manasa without Makeup Look

Related posts

03-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

Tharshi

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா..!

Tharshi

Leave a Comment