குறும்செய்திகள்

விவாகரத்து கேட்க சென்ற கணவன் : நீதிபதி கூறியதைக் கேட்டு அதிர்ந்த தருணம்..!

Husband and Wife Divorce funny Jokes

நீதிபதி : எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

கணவன் : ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உரிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. அதனால் விவாகரத்து தாருங்கள்.

நீதிபதி : இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப் போகிறது.

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும் போது கண்ணிலும் தண்ணீர் வராது.

பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியா போயிடுது.

அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும்.

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊற வைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒரு தடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா…?

கணவன் : ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

நீதிபதி : என்ன புரிஞ்சது.?

கணவன் : என் பொண்டாட்டி பூண்டு, வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க… 🙂

நீதிபதி : !!!!!

Husband and Wife Divorce funny Jokes

Related posts

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..!

Tharshi

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எச்சரிக்கை..!

Tharshi

20-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment