குறும்செய்திகள்

உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவும் முள்ளங்கி கூட்டு எவ்வாறு செய்வது தெரியுமா..!

Radish Kootu Recipe

முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

அந்தவகையில் இன்று முள்ளங்கி கூட்டு எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா..?

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – கால் கிலோ
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள்தூள் – சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப
உப்பு – தேவைக்கு
சிறு பருப்பு – 50 கிராம்
கடுகு, சீரகம் – தாளிக்க
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.

* சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்பு : இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.

Radish Kootu Recipe

Related posts

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கொரோனா விழிப்புணர்வுகள்..!

Tharshi

ஆப்பிள் டிவி HD விற்பனையை நிறுத்திய ஆப்பிள்..!

Tharshi

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

Tharshi

Leave a Comment