குறும்செய்திகள்

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Samsung triple folding phone design revealed

சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு, சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கிடைத்துள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் நவம்பர் 2020 வாக்கில் சமர்பிக்கப்பட்டது. இது ஜூன் 3, 2021 அன்று அச்சிடப்பட்டது.

மேலும், காப்புரிமையில் இடம்பெற்று இருக்கும் படங்கள், ஸ்மார்ட்போனின் மடிக்கும் விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஹின்ஜ் டிசைன் கேலக்ஸி இசட் போல்டு 2 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் பன்ச் ஹோல் கட்-அவுட், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

பின்புறம் இரண்டு வெவ்வேறு ஹின்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. பேக் பேனலில் மூன்று கேமரா சென்சார்கள், செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. புது ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஹின்ஜ் கேமரா லென்ஸ்களை கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஸ்மார்ட்போன் முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இவை செல்பி கேமராக்களாக பயன்படுத்தக்கூடியாத இருக்கும்.

வலதுபுற ஸ்கிரீன் நடுப்புறமாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இடதுபுற ஸ்கிரீன் நடுப்புற ஸ்கிரீனின் பின்புறம் மடிந்து கொள்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட், இடதுபுறத்தில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது. கேலக்ஸி இசட் போல்டு 2 போன்று இல்லாமல், இந்த மாடலின் முன்புற ஸ்கிரீன் சற்றே அகலமாக இருக்கிறது.

Samsung triple folding phone design revealed

Related posts

அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை..!

Tharshi

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 19,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

10-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment