மாவனெல்ல, தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில், 23 வயதான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மண்சரிவுக்குள் சிக்கி காணாமல் போயுள்ள ஏனையோரை தேடும் பணிகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.