குறும்செய்திகள்

கோலிவுட்டில் கிளம்பியுள்ள எதிர்ப்பு : அப்செட்டில் ஆழ்ந்துள்ள நம்பர் நடிகை..!

Actress Gossip Tamil cinema

கோலிவுட்டில் கிளம்பியுள்ள எதிர்ப்பால் கடும் அப்செட்டில் ஆழ்ந்துள்ளாராம் நம்பர் நடிகை.

மீண்டும் காதலருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நம்பர் நடிகை நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வெரட்டி காட்டி நடிக்கும் அந்த ஹீரோவும் மீண்டும் இணைந்துள்ளார்.

அதிரடி, ஆக்‌ஷன், வித்தியாசமான ரோல்கள் என நடித்து வரும் நம்பர் நடிகை மீண்டும் ஒரு ரொமான்ட்டிக்கான லவ் படத்தில் நடிக்க திட்டமிட, தனது காதலருக்கே அந்த வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிக் கூட்டணி அமைத்த படத்தில் நடித்த அந்த வெரைட்டி நடிகரையே மீண்டும் இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்தனர்.

நம்பர் நடிகை மட்டுமின்றி அந்த படத்தில் இன்னொரு டாப் நடிகையையும் ஹீரோயினாக வைத்து படத்தை இயக்க அந்த இயக்குநர் திட்டமிட படத்துக்கு சூப்பரான டைட்டில் மற்றும் கதையும் செட்டாக படம் ஆரம்பமானது. நம்பர் நடிகையும் எந்த ஈகோவும் பார்க்காமல் அந்த இன்னொரு நடிகையை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளித்திருந்தார்.

நல்லா ஜாலியா போயிட்டு இருந்த அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நம்பர் நடிகையை விட நீங்க நல்லா நடிக்கிறீங்க என காதலர் ஜொள்ளு விட நம்பர் நடிகைக்கு பொத்துக் கொண்டு கோபம் வந்து அவரை தனியாக அழைத்து சென்று செல்லமாக திட்டித் தீர்த்துள்ளார் என முன்னதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது அதெல்லாம் பிரச்சனையே இல்லை. அந்த நம்பர் நடிகை நடித்து வரும் புதிய படத்துக்கு இரண்டாவதாக நடித்து வரும் இன்னொரு நடிகையின் புதிய தொடர் மூலம் பெரிய பிரச்சனை உருவாகி விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தான் நம்பர் நடிகை மற்றும் அந்த இயக்குநர் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே இதே போன்ற ஒரு பிரச்சனையில் சிக்கிய அந்த வெரைட்டி நடிகரை அந்த விளையாட்டு படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியதும் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டு அதிலிருந்து விலகினார்.

ஆனால், இங்கே அனைத்தும் முடிந்து ரிலீசாக உள்ள நிலையில், ஏதாவது சர்ச்சை வெடித்தால் நம்ம நிலைமை மோசமாகி விடும் என ஒட்டுமொத்த படக்குழுவும் பீதியில் உள்ளார்களாம்.

Actress Gossip Tamil cinema

Related posts

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi

மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கம்..!

Tharshi

வடகொரியாவுக்கான சிறப்பு தூதரை நியமித்த ஜோ பைடன்..!

Tharshi

Leave a Comment