குறும்செய்திகள்

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Second dose of Sinopharm Vaccine in Colombo in SMS service

கொழும்பு நகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு சீனாபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கான பொது விபரங்களை, குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை தொற்று நோய் தொடர்பான வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சீனாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது கொழும்பு நகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு தடுப்பூசியின் அளவைப் பெற்றுக் கொள்ள வரும் திகதி, இடம் மற்றும் நேரம் குறித்து குறுஞ் செய்தியூடாக அறிவுறுத்தப்படும்.

மேலும், நாட்டில் சீனாபோர்ம் தடுப்பூசியின் முதல் அளவு இதுவரை 953,480 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Second dose of Sinopharm Vaccine in Colombo in SMS service

Related posts

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல் : புதிய சாதனை படைத்த மெஹதி ஹசன்..!

Tharshi

Workout Routine for Big Forearms and a Crushing Grip

Tharshi

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கொரோனா விழிப்புணர்வுகள்..!

Tharshi

Leave a Comment