குறும்செய்திகள்

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் உள்ளார் : ஐ.நா.சபை தகவல்..!

UN report Al-Qaeda leader al-Zawahiri is alive

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின், அந்த அமைக்கு தலைவரான அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது.

ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது..,

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இதில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அல்-கொய்தா அமைப்புடன் தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் இணைந்து இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளன. சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்து உள்ளன. இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெல் மந்த், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

என ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

UN report Al-Qaeda leader al-Zawahiri is alive

Related posts

2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 க்கு ஒத்திவைப்பு..!

Tharshi

04-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இலங்கையை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் – டெங்கு : இருவர் பலி..!

Tharshi

Leave a Comment