குறும்செய்திகள்

ஹோட்டல் தனிப்பமைப்படுத்தலை முடித்து வெளிப்புற பயிற்சியை தொடங்கினார் ரவீந்திர ஜடேஜா..!

WTC 2021 Final Ravindra Jadeja begins outdoor training

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

அதாவது, இங்கிலாந்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நடைபெறவுள்ளது.

இதற்காக இந்திய அணி கடந்த 2 ஆம் திகதி இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து சென்றடைந்ததும், சவுத்தாம்ப்டன் மைதானத்தை ஓட்டியுள்ள ஹில்டன் என்ற ஹோட்டலில் தங்களை தனிப்பமைப்படுத்திக் கொண்டனர்.

ஒருவருகொருவர் சந்திக்கக் கூடாது. இணைந்து பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. மூன்று நாட்கள் ஓட்டல் அறையை விட்டு வெளியேறக்கூடாது. குறிப்பிட்ட நாள் முடிவடைந்த பின்னர் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம் என, அனைவரும் முடிவெடுத்தனர்.

இந்நிலையில், இன்று ஜடேஜா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தனியாக பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அதன் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும், வீரர்கள் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள, பீல்டிங் பயிற்சி எடுக்க வெவ்வேறு நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு நேரத்தில் இணைந்து பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.

அத்துடன், இன்றுடன் ரூம் அறை தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டது. இனிமேல் குறைந்த அளவிலான வீரர்கள் ஒன்றிணைந்து ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள முடியும். எனவும் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

WTC 2021 Final Ravindra Jadeja begins outdoor training

Related posts

மாதிவெல பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணக் கட்டுப்பாடு..!

Tharshi

தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் என் போராட்டம் தொடரும் : அகிம்சா விக்கிரமதுங்க..!

Tharshi

02-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment