குறும்செய்திகள்

08-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

8th June Today Raasi Palankal

இன்று ஜூன் 08.2021

பிலவ வருடம், வைகாசி 25, செவ்வாய்க்கிழமை
8.6.2021, தேய்பிறை, திரயோதசி திதி மதியம் 1:02 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, பரணி நட்சத்திரம் காலை 7:24 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : மாத சிவராத்திரி, கார்த்திகை விரதம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நாள் முழுவதும் சிறப்பாக அமைந்து புதிய நன்மை கைகூடும்.
பரணி: அனுகூலமான சூழ்நிலை நிலவும். பரிசு ஒன்று காத்திருக்கிறது.
கார்த்திகை 1: வளைந்து கொடுத்து சிறப்படைவீர்கள். சொத்து சேர்க்கை நிகழும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: ஆவணங்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது.
ரோகிணி: புது விஷயங்களைக் கற்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் வெளியாட்களின் தலையீடு வேண்டாம்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வீடு, நிலம் பற்றிய முக்கியமான வர்த்தகம் முடியும்.
திருவாதிரை: உறவினர்களால் நலம் உண்டாகும். கனவு நனவாகும்.
புனர்பூசம் 1,2,3: உழைப்பின் மூலம் நினைத்த உயரத்தை எட்டுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பொது நலத்துக்காக உழைத்து கைதட்டல் பெறுவீர்கள்.
பூசம்: சொத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.
ஆயில்யம்: சந்தோஷமான காரணத்தால் பிள்ளைகள் உங்களைவிட்டுப் பிரியக்கூடும்.

சிம்மம் :

மகம்: வளர்ச்சி காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
பூரம்: பணியாளர்களின் நிலை உயரும். சந்தோஷமும் நிம்மதியும் மீளும்.
உத்திரம் 1: விசா தொடர்பான பிரச்னை தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றம் காண்பீர்கள். சண்டை சச்சரவுகள் தீரும்.
அஸ்தம்: துணிச்சலான செயலில் ஈடுபாடு வரும். சாதனை செய்வீர்கள்.
சித்திரை 1,2: சிறு உபாதை ஏற்பட்டு சிகிச்சையால் குணமடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பிரச்னைகள் தலைதுாக்க நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.
சுவாதி: அலைச்சலும் செலவுகளும் சிறு களைப்பை ஏற்படுத்தும்.
விசாகம் 1,2,3: தந்தையால் நன்மை உண்டு. பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை.

விருச்சிகம்:

விசாகம் 4: பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாகவே இருக்கும்.
அனுஷம்: வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: உன்னிப்பாக செயல்பட்டு தொழிலில் வரும் நஷ்டத்தை தவிர்ப்பீர்கள்.

தனுசு:

மூலம்: அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம்.
பூராடம்: பணியாளர்கள் யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
உத்திராடம் 1: நட்பினால் நன்மை ஏற்படும். சிறு சிறு பிரச்னைகள் விலகும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பண விஷயத்தில் நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள்.
திருவோணம்: உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட மன அமைதி நீங்கும்.
அவிட்டம் 1,2: ஆன்மிக ஈடுபாட்டால் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பெண்களால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும்.
சதயம்: துணிச்சலான நடவடிக்கையால் பிரச்னையில் இருந்து மீளுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: அலுவலக செயல்பாடுகளில் அதிக வேகம் வேண்டாம்.
உத்திரட்டாதி: விழிப்புணர்வு தேவை. கலைத்துறையில் ஈடுபாடு வரும்.
ரேவதி: முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. உழைப்பால் நன்மை வரும்.

8th June Today Raasi Palankal

Related posts

சுவையான மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போமா..!

Tharshi

இன்றைய முக்கிய செய்திகள் (08.06.2021) (காணொளி)

Tharshi

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எச்சரிக்கை..!

Tharshi

Leave a Comment