குறும்செய்திகள்

தடுப்பூசி முதல் டோஸ் போட்டு மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்..!

AR Rahman and his son vaccinated for covid19

கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் போட்டு விட்டதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது.

பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடுகளை அறிவித்தன.

இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்களும் சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை போட்டுள்ளார். தனது மகனுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

தடுப்பூசி போட்டக் கையோடு தனது மகனுடன் செல்பி எடுத்துள்ள ஏஆர் ரஹ்மான், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

மேலும், “தடுப்பூசி போட்டாகி விட்டது. கோவிஷீல்ட்.. நீங்கள் போட்டுவிட்டீர்களா..” என்றும் கேட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் தனது மகனுடன் செல்பி எடுத்த போட்டோ ரைவலாகி வருகிறது.

AR Rahman and his son vaccinated for covid19

Related posts

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிவாயு நிறுவனம்..!

Tharshi

கணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க.. கூலிப்படைக்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி : கொடூர சம்பவம்..!

Tharshi

ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண் : கைக்குட்டையை வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஹோட்டல்..!

Tharshi

Leave a Comment