குறும்செய்திகள்

விரைவில் விற்பனைக்கு வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Samsung Galaxy M21 Prime Edition Coming up for sale soon

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் சந்தைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சாம்சங் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இத்துடன் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் பிஐஎஸ் சான்று பெற்று, கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிரைம் எடிஷன் மாடலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 பிரைம் எடிஷன் SM-M215G/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான கேல்கஸி எம்21 மாடல் SM-M215F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

மேலும், புது எம்21 பிரைம் எடிஷன் மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy M21 Prime Edition Coming up for sale soon

Related posts

14-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு..!

Tharshi

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment