குறும்செய்திகள்

மட்டக்களப்பில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை..!

Tomorrow Corona vaccination activity in Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

அத்துடன், “சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகையான 6 இலட்சம் பேரில், 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலட்சத்து 11 ஆயிரம் பேர்களே.

எனவே, 3 இலட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற வேண்டியுள்ளது. இருந்தபோதும் நாளை 25 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

Tomorrow Corona vaccination activity in Batticaloa

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தப்பிக்க முயற்சித்ததில் பரிதாபமாக பலியான நபர்..!

Tharshi

What Is a ‘Shadow Ban,’ and Is Twitter Doing It to Republican Accounts?

Tharshi

சனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க இதை மட்டும் வீட்டில் செய்து பாருங்க..!

Tharshi

Leave a Comment