குறும்செய்திகள்

பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வரும் ஆர்யா படம்..!

Arya Magamuni Movie won Awards

ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.

அருள்நிதி நடித்த “மௌனகுரு” என்ற திரைப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக “மகாமுனி” என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சாந்தகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில்..,

“மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் இறுதியாகி விட்டன. அத்துடன் மேலும் இரண்டு விருது போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Arya Magamuni Movie won Awards

Related posts

27-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்பான விபரம்..! (படம் இணைப்பு)

Tharshi

கமல் படத்தில் இணையும் மாஸ்டர் பட நடிகர்..!

Tharshi

Leave a Comment