குறும்செய்திகள்

சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி..!

Coriander Onion Chutney Recipe In Tamil

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

கொத்தமல்லி இலை நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.

அந்தவகையில், இன்று சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா..?

தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 6 பற்கள்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு :

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

  • சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
  • பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி..!
Coriander Onion Chutney Recipe In Tamil

Related posts

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் கேன் வில்லியம்சன்..!

Tharshi

வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா..!

Tharshi

கே.ஜி.எப் 3ம் பாகம் : லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

Leave a Comment