குறும்செய்திகள்

ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கம்..!

Development of corona vaccine for animals in Russia

ரஷிய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஆனாலும், இன்னும் பல கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.

இதற்கிடையில், மனிதர்களை போல விலங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கும் வனவிலங்குகளான சிங்கம், புலி போன்றவற்றிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுவந்தது.

அதன் பயனாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து 100 சதவிகிதம் பாதிகாக்கும் கார்னிவக்-கொவாக் என்ற தடுப்பூசியை ரஷியா வெற்றிகரமாக உறுவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசி முதல் முறையாக விலங்கிற்கு செலுத்தப்பட்டது. ரஷிய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே விலங்குகளுக்கு என்று தனியே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை ரஷியா நிகழ்த்தியுள்ளது.

மேலும், விலங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள போதும் விலங்குகளிடமிருந்து கொரோனா மனிதர்களுக்கு பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், செல்லப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Development of corona vaccine for animals in Russia

Related posts

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்..!

Tharshi

09-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பக்கவாதத்திற்கான நவீன சிகிச்சை முறைகள்..!

Tharshi

Leave a Comment